தனது ரசிகை கேள்விக்கு வெளிப்படையாகவே பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி...!

தனது ரசிகை கேள்விக்கு வெளிப்படையாகவே பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி...!


vijaysethupathi-answered-to-his-fan

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர். இவர் சினிமாவில் நுழைய மிகவும் சிரமம் அனுபவித்து இப்போது ஒரு நல்ல இடத்தில இருக்க்கிறார். இவர் தனக்கென ஒரு தனி பாதையில் செல்பவர். அவருக்கென தனி கதையில் தனி பாணியில் படங்களை எடுத்து நடிக்க கூடிய திறமை வாய்ந்த நடிகர் ஆவார்... வாழ்க்கையில் இவரை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

இவர் தான் எந்தவொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் ரசிகர்கள் மட்டும் ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு தயங்காமல் பதில் அளிக்கக் கூடியவர்..
அவர் அளிக்கும் பதில் பிறகு அனைவருக்கும் உபயோகமாக இருக்க கூடியதாக இருக்கும்...

அந்த அடிப்படையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரது ரசிகை ஒரு பெண் உங்களது மனைவி மற்றும் குழந்தைகளை வெளியில் காட்டாததற்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், யார் சொன்னது என் மனைவி சொல்லி நான்கு ஐந்து வீடியோ பதிவு உள்ளது என்று கூறியுள்ளார்...

குழந்தைகளை வெளியே சொல்லாததற்கு காரணம் என்னையே இந்த புகழ் கெடுத்துவிடுமோ என்ற பயம் எனக்கு. அந்த பயத்தில் தான் நான் தினம் தினம் என் நாட்களை ஓட்டுகிறேன் என்றும், அது என் குழந்தைகளை கெடுத்து விடுமோ என்ற பயமும் எனக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.. நான் தந்தை அல்லவா அதனால் தான் மிகவும் பொறுப்புடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்..