#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
இளையதளபதி விஜய் படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை... விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்...!
சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனா நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. இதனை அடுத்து இவர் நடித்த படம் கீதா கோவிந்தம். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாக இவர் நோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்து வருகின்றனர்.
அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய இரண்டு படங்களும் சென்னையில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் நோட்டா தான். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய் பற்றியும் சூப்பர் ஸ்டார் பற்றியும் பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பு மட்டுமல்லாமல் அவரது ஸ்டைல் மிகவும் நன்றாக இருப்பதாகவும், விஜய் படத்தின் சில காட்சிகளை மட்டும் நான் பார்த்திருக்கிறேன் அவரது ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவரது முழுப்படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை எனவும் கூறியுள்ளார்.