மீண்டும் செம மாஸாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நாட்டாமை நடிகர்! தீயாய் பரவும் புகைப்படம்!!

மீண்டும் செம மாஸாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நாட்டாமை நடிகர்! தீயாய் பரவும் புகைப்படம்!!


Vijayakumar going to act in zee tamil serial

80,90ஸ் கால கட்டங்களில் சினிமாவையே கலக்கி வந்த பல முன்னணி பிரபலங்கள் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பழம்பெரும் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார். அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பின்னர் இவர் சின்னத்திரையில் களமிறங்கி சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது அவர் சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை பெருமளவில்  கவர்ந்து வரும் 'ஒரு ஊருல 2 ராஜகுமாரி' என்ற சீரியலில் நடிகர் விஜயகுமார் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் ஒரு ஊருல 2 ராஜகுமாரி தொடரின் நடிகர், நடிகைகளுடன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijayakumar