அட.. மேட்சான ஆள்தான்! விராட் கோலியாக நடிக்க ஆசைப்படும் பிரபல இளம் நடிகர்! யார்னு பார்த்தீங்களா!!

அட.. மேட்சான ஆள்தான்! விராட் கோலியாக நடிக்க ஆசைப்படும் பிரபல இளம் நடிகர்! யார்னு பார்த்தீங்களா!!



Vijaya devarakonda like to act as virat kohli

தெலுங்கு சினிமாவில் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் இறுதியாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார்.

லைகர் திரைப்படத்தில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். படம் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் லைகர் படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

vijaydevarakonda

இந்நிலையில் விஜய தேவரகொண்டா துபாயில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்துள்ளார். அப்பொழுது அவரிடம் நீங்கள் எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆர்வப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனக்கு தோனியின் பயோபிக்கில் நடிக்க ஆசை. ஆனால், அது ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதனால் விராட்கோலியின் வாழ்க்கை கதை படமாக உருவாகினால் அதில் நடிக்க ஆசைப்படுவதாக விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.