சினிமா

மீண்டும் வந்தாச்சு டிவி சீரியல்கள்..! புதிய எபிசோட் எப்போது வரும்.? - விஜய் டிவி விளக்கம்..!

Summary:

Vijay tv serials start again from next week

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

60 பேருடன் படப்பிடிப்புகளை நடந்த தமிழக அரசு உத்தரவு வழங்கியதை அடுத்து படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் நிறுத்தப்பட்டுள்ள பழைய சீரியல்களின் புது எபிசோட் எப்போதில் இருந்து ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் வாரம் முதல் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, காற்றின் மொழி உள்ளிட்ட சீரியல்கள் வழக்கம் போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும் எனவும், ஜூன் 8-ம் தேதி முதல் செந்தூர பூவே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருப்பதாகவும் விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

இந்த தொடர் மூலம் பிரபல தமிழ் நடிகர் ரஞ்சித் சின்னத்திரையில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ப்ரமோஷன் வீடியோக்களையும் விஜய் டிவி தற்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது.


Advertisement