"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
வாரே வா.. விஜய்டிவி சீரியல் நடிகையை காதலித்து கரம்பிடித்த சன்டிவி சீரியல் நடிகர்..! திடீர் திருமணம்.. வைரலாகும் திருமண வீடியோ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற நெடுந்தொடர் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் தங்கை காதலை நிறைவேறுவதற்காக மனநிலை சரியில்லாத அண்ணனை அக்கா திருமணம் செய்துகொள்கிறார். இந்த தொடரை விரைவாகவே முடித்துவிட்டனர்.
சீரியலில் ஹீரோவின் தம்பியாக அபிநவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் விஷ்ணுகாந்த். இவர் இதற்கு முன்பே பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான தொடரிலும் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் ஹீரோயின் தம்பியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். சம்யுக்தா நிறைமாத நிலவே என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இதன் பின்பு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
மேலும் தாங்கள் இருவரும் காதலிப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இதனையடுத்து கடந்த மார்ச் 3-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என இவர்களுடைய திருமணத்தில் பலரும் கலந்துகொண்ட நிலையில், திருமண வீடியோவை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
தாலி கட்டுதல், காதல் ப்ரபோசல் என பல அழகிய தருணங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.