விஜய் டிவி பிரபல சீரியல் டைரக்டர் மரணம்... சோகத்தில் விஜய் டிவி பிரபலங்கள்..!

விஜய் டிவி பிரபல சீரியல் டைரக்டர் மரணம்... சோகத்தில் விஜய் டிவி பிரபலங்கள்..!


vijay-tv-famous-serial-director-death-vijay-tv-celebrit

சின்னத்திரையில் பல ஹிட் சிரீயல்களை கொடுத்த இயக்குனர் தாய் செல்வம். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூட்ரனின் மூன்றாம் விதி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் தனது கவனம் முழுவதையும் சீரியல் பக்கம் திருப்பினார் தாய் செல்வம்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலை இயக்கியவர் இவரே. இந்த சீரியல் தாய் செல்வத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதனையடுத்து விஜய் டிவியில் தாயுமானவன், மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன் போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார்.

director

இதனைத் தொடர்ந்து இறுதியாக தாய் செல்வம் ஈரமான ரோஜாவே 2  சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் தாய் செல்வம் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.