BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வசமாக சிக்கிக்கொண்ட செழியன்.. குழந்தை பிறந்த நேரம் ஆப்பு தான்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரின், அடுத்த வாரத்திற்கான ப்ரமோவில், ஜெனி-செழியன் தம்பதிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறக்கிறது.
அப்போது, செழியனுடன் இவ்வளவு நாட்கள் மேற்கொண்டு வந்த ரகசிய உறவில் இருக்கும் மாலினி, தொடர்ந்து செழியனுக்கு தொடர்பு கொள்கிறார். அவர் போன எடுக்க மறுக்கிறார்.
இதனால் வாட்ஸ் அப்பில் நீங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றால் எனது கைகளை அறுத்துக் கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கம் பாணியில் ஆடியோவை அனுப்புகிறார் மாலினி.
இதனை பாக்கியலட்சுமி கேட்டு விடுகிறார். இதனால் இனிவரும் வாரத்தில் செழியன் செய்த சேட்டைக்கான பிரதிபலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.