எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய பிரபல நடிகை! விஜய் - த்ரிஷா திருமணம்.... இந்த நேரத்தில் இது தேவையா.? குழு குழு நேரத்தில் கொளுத்திப்போட்டுட்டாரே..!!!



vijay-trisha-rumours-amid-tvk-political-rise

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு உறுதியாகியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவை அரசியல் வட்டாரம் கவனமாக நோக்கி வருகிறது.

இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே, நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான தனிப்பட்ட வதந்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து நடைமுறையில் இருப்பதாக கூறப்படும் தகவல்களும் சேர்ந்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

இதையும் படிங்க: தவெக மகளிர் அணி கள்ளக்காதலை ஆதரிக்கிறதா? பெண் ஒருவர் நறுக்குன்னு சொன்ன பதில்....வைரலாகும் வீடியோ!!!

ராக்கி சாவந்த் பேட்டி வைரல்

இந்த சூழலில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யும் திரிஷாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களது மெஹந்தி விழாவிற்கு அனைவரும் செல்லலாம் என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும், “தமிழகத்தின் முதல் கிறிஸ்தவ முதலமைச்சர் விஜய்” என அவர் குறிப்பிட்ட கருத்தும் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் கட்சியில் இணைய தயார் என்றும் அவர் நகைச்சுவையாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் - திரிஷா குறித்து தொடரும் பேச்சுகள்

கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் திரிஷா இடையேயான நெருக்கம் குறித்து இணையத்தில் பல தகவல்கள் பரவி வருகின்றன. சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டது முதல், சமீபத்திய தேர்தல் முடிவுகளின் போது நடந்த சில சம்பவங்கள் வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக மே 4-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி சென்ற திரிஷா, அங்கிருந்து நேரடியாக நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. திரைத்துறையைச் சேர்ந்த மற்ற பிரபலங்கள் யாரும் அங்கு செல்லாத நிலையில், திரிஷா மட்டும் சென்றதாக வெளியான தகவல்கள் மேலும் கவனம் ஈர்த்துள்ளன.

ராதிகா பதிவு கிளப்பிய புதிய விவாதம்

இதற்கிடையில் நடிகை ராதிகா சரத்குமார் இன்ஸ்டாகிராமில் திரிஷாவிற்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து பதிவும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. “Happy bday dear… whatte a gift” என்ற அவரது பதிவு, விஜய்யின் அரசியல் வெற்றியை மறைமுகமாக குறிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் வருவாரா என்ற அரசியல் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மறுபுறம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள இத்தகைய சினிமா பாணி வதந்திகளும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

இதையும் படிங்க: விஜய்க்கு ஆப்பு வைத்தவரே அவர் தானா....? பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்! பின்னணியில் 'அந்த ' ஆள்பவர் ' யார்?..!!!