பெங்களூருக்குச் சென்று, தளபதி விஜய் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதாவது அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய சினிமாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தளபதி விஜய் பெங்களூரு கன்டிவாரா ஸ்டூடியோவில் அமைந்துள்ள நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.