கார்த்தி படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்.! இதுதான் காரணமா?? வெளிவந்த தகவல்!!vijay-sethupathi-releaving-from-karthi-movie

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பின் வரிசையாகப் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. அவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கார்த்தி தற்போது இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜு முருகன் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியவர்.

vijay sethupathi

இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் அந்த படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் வில்லன் ரோலிற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், அதற்கேற்ப வலிமையான நடிகரை தேர்வு செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாம்.