ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
என்னது விஜய்சேதுபதியா இது? அடையாளமே தெரியாமல் மாறிப்போன புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
என்னது விஜய்சேதுபதியா இது? அடையாளமே தெரியாமல் மாறிப்போன புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.
அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க, கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96, பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்தில் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் இருக்கும் விஜய் சேதுபதியின் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.