சினிமா

வாவ்... செம மாஸ் தகவல்... பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

வாவ்... செம் மாஸ் தகவல்... பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி, குறுகிய காலகட்டத்திலேயே தனது கடின உழைப்பால், முயற்சியால் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடிக்கக் கூடியவர்.

இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் புதிய அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இவரின் மிரட்டலான வில்லன் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியான புதிய தகவல் படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். 

அப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க வில்லன் வேண்டும் என்பதால் அவர்கள் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement