பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
என்னது.. ஜெய்பீம் படத்தில் முதலில் சூர்யா ரோலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா.! வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
இருளர் இன மக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து, உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் வன்னியர்கள் சமூகத்தினரை தவறாக சித்தரிப்பது போன்று இருப்பதாக சர்ச்சையும் எழுந்தது. இதில் வழக்கறிஞர் சந்துரு கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் விஜய் சேதுபதியாம்.
இதுகுறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் விழா ஒன்றில் கூறியதாவது, நான் சமீபத்தில் சிவக்குமார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது சூர்யாவிடம் ’ஜெய்பீம்’ படம் குறித்து பேசிகொண்டிருந்தேன். அப்பொழுது அவர் முதலில் இப்படத்தை சிறியளவில் எடுக்க திட்டமிட்டு அதில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க முடிவு செய்ததாகவும் ஆனால் பின்னர் சந்துரு கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்த நிலையில் அதில் தானே நடிக்க முடிவு செய்ததாகவும் சூர்யா கூறியதாக தெரிவித்துள்ளார்.