மிரட்டும்! விஜய் சேதுபதியின் சைரா நரசிம்ம ரெட்டி மோஷன் போஸ்டர்; ரசிகர்கள் உற்சாகம்.!vijay sethupathi - sayera motion poster relese - fans happy

விஜய் சேதுபதி நடித்து வரும் 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தெலுங்கின் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி தற்போது 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தமிழ் திரையுலகின் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா போன்ற பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தினை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார்.

ஆந்திராவின் சுதந்திர போராட்டத்தின் போது புரட்சி வெடிக்க காரணமாக இருந்த, சயீராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில் இந்த படம் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.