தளபதி விஜய் போட்டோவை எங்க ஒட்டியிருக்கானுங்கனு பாருங்க! கோவத்தில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் போட்டோவை எங்க ஒட்டியிருக்கானுங்கனு பாருங்க! கோவத்தில் விஜய் ரசிகர்கள்!


Vijay photo pasted at public toilet

தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். பல்வேறு வெற்றிப்படங்கள், தோல்விப்படங்கள் என அனைத்தையும் சந்தித்து இன்று தமிழ் சினிமாவின் தளபதியாக மாறியுள்ளார் விஜய்.

கடைசியாக AR முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முயறையாக தளபதி 63 படத்தில் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் விஜய்.

vijay

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களை கோவப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது விஜய்யின் புகைப்படத்தை பொது கழிவறை முன்பு ஒட்டியுள்ளனர். அதை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.