வாவ் சான்சே இல்ல! அச்சு அசல் விஜய் போலவே அமைக்கப்பட்ட மெழுகு சிலை! வைரலாகும் புகைப்படம்.



vijay-npkrav

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தால் பெண்கள் மத்தியில் இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

vijay

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் கடை கோடி சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள மியூசியம் ஒன்றில் நடிகர் விஜய் போலவே மெழுகு சிலை ஒன்று பொது மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

vijay