உலக நாயகனின் வாழ்த்துக்களுடன் அட்டகாசமாக தொடங்கியது மற்றுமொரு புதிய சேனல்! இனி செம கலக்கல்தான்!

உலக நாயகனின் வாழ்த்துக்களுடன் அட்டகாசமாக தொடங்கியது மற்றுமொரு புதிய சேனல்! இனி செம கலக்கல்தான்!


vijay-music-channel-started-today

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற, ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்படும் ஒரு சேனலாகும். இதில் ஏராளமான வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில்  நடனம், பாடல் மற்றும் காமெடிக்கான ரியாலிட்டி ஷோக்கள் போன்றவை ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் விஜய் டிவிக்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் சூப்பர் என்ற புதிய சேனல் அறிமுகமானது. முழுவதும் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பல ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில்  அதன் அடுத்த அத்தியாயமாக தற்போது விஜய் மியூசிக் என்ற மற்றுமொரு புதிய சேனல் துவங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பல தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தவண்ணம் இருந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் கோலாகல அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அதனை  துவங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.