அடடே.. சூப்பர்! நம்ம தளபதி விஜய்யோட அம்மாவிற்கு ரொம்ப பிடித்த 3 சீரியல்கள் இதுதானா.! என்னென்ன பார்த்தீங்களா??

அடடே.. சூப்பர்! நம்ம தளபதி விஜய்யோட அம்மாவிற்கு ரொம்ப பிடித்த 3 சீரியல்கள் இதுதானா.! என்னென்ன பார்த்தீங்களா??


vijay-mother-shoba-favourite-serial

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களைக் கொண்டு முன்னணி நடிகராக, தளபதியாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். அவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். பிரபல இயக்குனரான இவர் நடிகர் விஜய்யின் வெற்றிக்கு முக்கிய வழிகாட்டியாக இருந்தவர்.

நடிகர் விஜய்யின் தாய் ஷோபா.  
பாடகி, கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு விளங்குபவர். இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போதும் இசையில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி வருகிறார்.

Shobha

இந்நிலையில் அண்மையில் ஷோபா அவர்கள் பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த சீரியல்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பிடிக்கும். அதை தினமும் தொடர்ந்து பார்ப்பேன்.  அதைதவிர பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.