உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக்கு பதில் இந்த மாஸ் ஹீரோதான் நடிக்க இருந்ததாம்! யார் தெரியுமா?



Vijay missed hit movie ullaththai alliththaa

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இதுவரை எண்ணற்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் நடிகர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான படங்களில் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றவை. சமீபத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது நடிகர் சிம்புவை வைத்து வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் பற்றி சுவாரசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம்.

vijay

இந்த படத்தில் கார்த்திக்கு பதில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று சுந்தர் சி  ஆசை பட்டாராம். ஆனால் அந்த சமயம் விஜய் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் கார்த்திக் நடித்துள்ளார். இது போன்று விஜய்க்காக 8 படங்கள் தயார் செய்தாராம் சுந்தர் சி. ஆனால் ஒரு படத்தில் கூட விஜய் நடிக்க வில்லையாம். ஆனால் அந்த 8 படங்களும் மாபெரு வெற்றிபெற்றது என்று சுந்தர் சிஒரு பேட்டியில் கூறியிருந்தார்.