மாநிலம் முழுவதும் வரவிருக்கும் இளைய தளபதி விஜயின் அதிரடி திட்டம்.. என்ன தெரியுமா.?Vijay makkal iyakkam latest news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ' லியோ ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

vijay

இது போன்ற நிலையில், விஜய் அரசியலிலும் களமிறங்க போவதாக தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல திட்டங்களை விஜய் செயல்படுத்தி வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயின் அரசியல் நகர்வுதான் லியோவின் இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு காரணம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம் நடத்த போவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

vijay

இதற்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாடசாலை திட்டம், இலவச சட்ட ஆலோசனை மையம் போன்ற திட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.