காத்திருக்கும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த நடிகர் விஜய் என்ன செய்துள்ளார் தெரியுமா? வைரலாகும் வீடியோ.!

காத்திருக்கும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த நடிகர் விஜய் என்ன செய்துள்ளார் தெரியுமா? வைரலாகும் வீடியோ.!


vijay make happy for fansin shooting spot

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர்  நடிகர் விஜய். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றங்கள் உள்ளன. மேலும் அவரது ரசிகர்கள் விஜய் படம் வெளியாகும் நாளை திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து விஜய் 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

vijay

மேலும்  இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னையை அடுத்த பின்னி மில்லில் விஜய் 63 படத்திற்கான  ஷூட்டிங்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

vijay

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.இந்நிலையில் விஜய் விஜய் மாடியில் நின்று தனக்காக காத்திருக்கும்  ரசிகர்களை பார்த்து கையசைத்ததுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும்  இந்த வீடியோவை  சமூகவலைதளங்களில் வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.