விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர்கள் குடும்பத்திற்காக விஜய் செய்த காரியம்! தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்!
விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர்கள் குடும்பத்திற்காக விஜய் செய்த காரியம்! தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாள் ஆகியவை திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடப்படும்.
நடிகர் விஜய் சமூகங்களில் நடக்கும் பல அநீதிகளுக்கு எதிராக நடக்கக்கூடிய போராட்டத்தில் இணைந்து குரல் கொடுக்க கூடியவர். மேலும் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் உயிரைவிட்ட அனிதா வீட்டிற்கும்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று சந்தித்தும் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் ரசிகர்களும் மக்கள் மன்றம், விஜய் நற்பணிமன்றம் என பல அமைப்புகளை இயக்கி கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே விஜய்யின் மக்கள் மன்றத்தில் முக்கியபொறுப்பு வகித்து வந்த முருகன் என்னும் நபர் விபத்தில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வறுமையில் வாடிக் கொண்டிருப்பதாக விஜய் ரசிகர் மன்றத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் தனது ரசிகர் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிதி வழங்கி உதவி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் குடும்பத்திற்காக 50000ரூபாய் பண உதவி கொடுத்து உதவியுள்ளார்.