10 மற்றும் 12ஆம் வகுப்பு சாதனை மாணவர்களை சந்திக்கும் தளபதி விஜய்.! அதுவும் எங்கு? எப்போது தெரியுமா? வெளிவந்த அறிவிப்பு!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு சாதனை மாணவர்களை சந்திக்கும் தளபதி விஜய்.! அதுவும் எங்கு? எப்போது தெரியுமா? வெளிவந்த அறிவிப்பு!!



vijay-going-to-meet-10-and-12th-winning-students

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் கூட உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ஏழை, எளியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் 10, 12 ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தளபதி சொல்லுக்கிணங்க அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வருகின்ற(17-06-2023) சனிக்கிழமை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் அவர்கள் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.