வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி விஜய்.. ரசிகர்களின் அட்டூழியம்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் பல வெற்றி திரைப்படங்களை தனது ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மோகன் லால் போன்ற பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற நிலையில், இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த விழா ரத்தாகிவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு அரசியல் தான் காரணம் என்று பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலர் 'லியோ' திரைப்படத்திற்கு ஆதரவளித்து போஸ்ட் செய்து வருகின்றனர். அதில் "ஆடியோ லான்ச் இல்லையென்றால் என்ன ஆட்சியை புடிச்சுட்டா போதும்", மற்றும் "வருங்கால முதலமைச்சர் விஜய்" என்றும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.