தமிழகம் சினிமா

வேற லெவலுக்கு சென்ற நடிகர் விஜயின் தீவிர ரசிகன்!. வைரலாகும் புகைப்படம்!!

Summary:

vijay fan did differently


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரஜினி எந்த விழாவில் பேசினாலும் "எனது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே... என்றுதான் தொடங்குவார். பொதுவாக விஜய் படம் வெளியானாலே அன்று எதோ திருவிழா போல தான் பிரமாண்டமாக கொண்டாடப்படும்.

நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள் அவரது புகைப்படங்களை பைக்கில் ஒட்டுவது, வீட்டின் சுவற்றில் ஒட்டுவது, சமூகவலைத்தளங்களில் பெயர்களின் பக்கத்தில் விஜய் பெயரை சேர்த்துக்கொள்வது போன்ற சம்பவங்கள் நடக்கும். அதையும் தாண்டி விஜய்யின் தீவிர ரசிகர்  ஒருவர் வியக்கவைக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற விஜயின் தீவிர ரசிகருக்கு கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தளபதி விஜய் என்று பெயர் சூட்டியுள்ளார். அதே பெயரை பிறப்பு சான்றிதழிலும் பதிவு செய்துள்ளார். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வித்தியாசமாக இருந்த காரணத்தினால் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement