வித்தியாசமான பட பெயருடன் வைரலாகும் விஜய் ஆண்டனியின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. பேரு வேற லெவல் பாஸ்..Vijay antony next movie kodiyil oruvan first look poster

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்திற்க்கு கொடியில் ஒருவன் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக இருந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார் விஜய் ஆண்டனி.

vijay antony

இதனை அடுத்து இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. பெரும்பாலும் விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் வெற்றிபெற அவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்நிலையில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புது படம் ஒன்றில் விஜய் ஆண்டனி நடித்துவருகிறார். இந்த படத்திற்கு கோடியில் ஒருவன் என பெயரிப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது...

vijay antony