சினிமா

விழா மேடையில் அழகிகளுடன் விஜய் ஆண்டனி உற்சாக நடனம்; வைரலாகும் வீடியோ.!

Summary:

vijay antony - kolaikarn - release june7 - promo video

விஜய் ஆண்டனி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்துள்ள கொலைகாரன் திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி நாளை வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தியா மூவிஸ் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். பிச்சைக்காரன், திமிரு பிடிச்சவன், சைத்தான் போன்ற படங்களைப் போன்றே இந்த படத்திற்கும் கொலைகாரன் என பெயர் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி. 

படத்தின் பெயரை வைத்து விஜய் ஆண்டனியின் வழக்கமான படங்களைப் போல இந்தப் படத்திலும் திகில் சம்பவங்கள் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாகவும் விஜய் ஆண்டனி கொலைகாரனாகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் உண்மைதானா என்பதனை வரும் ஜூன் ஏழாம் தேதி படம் வெளியானதும் தெரிந்துவிடும். 

நாளை வெளியாக உள்ள இப்படத்திற்கு ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “கில்லர்“ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார்.

முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “கொலைகாரன்“ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். விஜய் ஆண்டனி ஆடிய வீடியோ தெலுங்கு மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement