தேங்க் யூ.. என் தங்கமே!! செம ஹேப்பியில் விக்னேஷ் சிவன்! ஏன் தெரியுமா?? வைரலாகும் வீடியோ!!

தேங்க் யூ.. என் தங்கமே!! செம ஹேப்பியில் விக்னேஷ் சிவன்! ஏன் தெரியுமா?? வைரலாகும் வீடியோ!!


vignesh-shivan-shares-his-birthday-celebration-video

இயக்குனர் விக்னேஷ் சிவனும், தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் திரையுலக நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தாய்லாந்திற்கு தேனிலவு சென்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவரவர் பணிகளில் பிஸியாக இருந்த நயன் - விக்கி மீண்டும் ஸ்பெயின் நாட்டுக்கு  செகண்ட் ஹனிமூன் செய்து ரொமாண்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்தனர்.

இந்நிலையில் இயக்குனர்  விக்னேஷ் சிவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை துபாயில் புர்ஜ் கலீஃபாவிற்கு கீழ் தனது மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட அவர், தங்கமே.. உன்னுடன் நான் கொண்டாடும் 8வது பிறந்தநாள் இது. எனது ஒவ்வொரு பிறந்தநாளையும் முன்பிருப்பதை விட ஸ்பெஷலாக, மிகவும் அழகாக மாற்றி வருகிறார். எனக்கு எது கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உனக்கு தெரியும். அதையே எனக்கு கொடுக்கிறாய்.

இந்த பிறந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நாள். நீ எனது காதலியாக இருப்பதற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் நம்முடைய இந்த காதல் மேலும் மேலும் அதிகமாக தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.