சினிமா

புது அவதாரம் எடுக்கும் விக்னேஷ் சிவன்! அதுவும் நயன்தாராவை வைத்தே!

Summary:

Vignesh shivan producing new film

2012 ஆம் ஆண்டு சிம்பு, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த போடா போடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக ஊர் சுத்துவது, வெளிநாட்டு செல்வது என அவர்களது நடவடிக்கை அவர்களது காதலை உறுதி செய்தது.

இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் அவர் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்  சித்தார்த் நடித்த திகில் படமான ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளாராம்.

இதனையடுத்து, இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.


Advertisement