வாவ்.. செம கியூட்! விக்னேஷ் சிவனை இறுக கட்டியணைத்தபடி நயன்தாரா.! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

வாவ்.. செம கியூட்! விக்னேஷ் சிவனை இறுக கட்டியணைத்தபடி நயன்தாரா.! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!!


vignesh-shivan--nayanthara-latest-photos-viral

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று செம ஹேப்பியாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் திருமணமான நான்காவது மாதத்திலேயே விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என அறிவித்திருந்தார். மேலும் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் சட்டத்திற்கு எதிராக அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக சர்ச்சைகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், சட்ட விதிமுறைகளை மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.

nayanthara

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் தங்களது நண்பர்களுடன் உள்ளனர். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இறுக்கமாக கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

nayanthara