சினிமா Womens day 2019

மகளிர் தினத்துக்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? இதோ!

Summary:

Vigensh sivan gifted to nayanthara in womes day

உலகம் முழுவதும் மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் கொண்டாடப்டுகிறது. அந்த வகையில் நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண்கள் என்றால் அடிமைகள் என்றும், அவர்களுக்கு ஏன் படிப்பு, வேலை என ஒதுக்கிய காலம் மாறி தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் அனைத்திலும் சாதிக்கமுடியும் என்ற அளவிற்கு பெண்கள் உயர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் மகளிர் தினத்தில் தங்களுக்கு பிடித்தமான பெண்களுக்கு பரிசு வழங்குதல், வாழ்த்து கூறுதல் என அனைவரும் படு பிசியாக இருந்த நேரத்தில் தனது காதலியான நயன்தாராவிற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸான பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

வித விதமான பூக்களை பரிசாக வாங்கிக்கொடுத்து மேலும் அதனுடன் அழகான கவிதை ஒன்றையும் நயன்தாராவிற்காக கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். “நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே” என தனது காதலியை புகழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.Advertisement