சினிமா

விஜய் டிவி பிரபலத்திற்கு விரைவில் இரண்டாவது திருமணம்! யாருக்கு தெரியுமா?

Summary:

Viajy tv serial actress bavani reddy second marriage

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் தெலுங்கு நடிகை பவானி ரெட்டி. தற்போது தமிழ் சீரியல்களில் பிசியாக நடித்துவருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி என்ற தொடரில் நடிகர் ப்ரஜனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். சின்னத்தம்பி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் நடிகர் ப்ரஜனுக்கும், பவானிக்கு இது பெரிய அளவில் வரவேற்பை கொடுத்துள்ளது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் சேர்ந்து நடித்த பிரதீப் என்பவரை பவானி காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுக்குள் வந்த சண்டையால் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். கணவன் இறந்த சோகத்தை மறக்க மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பவானி ரெட்டி.

இந்நிலையில் பவானியின் பெற்றோர் வறுபுறுத்தலுக்கு இணங்க,  இவர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். இவரும் ஒரு நடிகர் என கூறப்படுகிறது.

இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இரண்டாவது திருமணம் என்பதால் பிரமாண்டமாக நடத்துவதை தவிர்த்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. 


Advertisement