மீண்டும் பிகில் பட குழுவினருக்கு வந்த பேரதிர்ச்சி!! கோபத்தின் உச்சத்தில் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிங்கப்பெண்ணே பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது. இதனை தொடர்ந்து ஏ. ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் இப்பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முன்பு ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.