சினிமா

தீயாய் பரவும் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வர

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

மேலும் சிம்பு கைவசம் பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் உள்ளன. இதில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்கள், ராதிகா மற்றும் சிம்பு பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படங்களை நடிகை ராதிகாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement