சினிமா

குக் வித் கோமாளியை கலகலப்பாக்கும் செஃப் வெங்கடேஷ் பட் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா! கலங்கிய ரசிகர்கள்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், ஷிவாங்கி, அஸ்வின், கனி மற்றும் பவித்ரா ஆகியோர் இருந்து வந்தனர் மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் ஆகியோர் ரகளைகள் செய்து வருகின்றனர்.

இதில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். அவர்கள் இருவருமே மார்க் போடுவது மட்டுமன்றி கோமாளிகளுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நேற்று பவித்ரா எலிமினேட் ஆனார்.

அப்பொழுது பேசிய செஃப் வெங்கடேஷ் பட், இந்த ஷோவில் பங்கேற்றது எனக்கு  மன உளைச்சலில் இருந்து மீள உதவியது. நான், 4-ம் வகுப்பில் பெயில், 8-ம் வகுப்பில் பெயில் , 9-ம் வகுப்பில் 2 முறை பெயில். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்தது தாமதம். எனது கேரியரை தொடங்கியது, ஹோட்டலில் வேலை கிடைத்தது, திருமணமானது எல்லாம் லேட், என் முதல் டிவி நிகழ்ச்சி வெளியான அன்று எனது அம்மா ரயில் விபத்தில் இறந்துவிட்டார். . இவ்வாறு என் வாழ்க்கையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதில் நான் இன்னும் வலிமையாக மீண்டு வந்துள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.


Advertisement