சினிமா

10 வருடங்களுக்கு முன்பு சிம்புவுடன் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?  

Summary:

Vedhika recent photo shoot

2005ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை வேதிகா. அதன் பின்பு முனி,  சிம்புவின் காளை,  சக்கரக்கட்டி, மலை மலை ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார் வேதிகா. 

2008க்குப் பிறகு அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஒரு சில தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். 

சில காலமாக படவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்த நடிகை வேதிகா தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வந்தார். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் வேதிகா பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இணைந்து நடிக்கும் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோஷப் இயக்குகிறார்.

இந்நிலையில் அடுத்த பட வாய்ப்புகளுக்காக மீண்டும் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் வேதிகா. இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளியின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


    


Advertisement