சினிமா

சத்தமில்லாமல் வர்மா டீசர் செய்த சாதனை...! ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...!

Summary:

varma-teaser-cross-3.5m-views

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகன் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். அவரது பெயர் துருவ். தற்போது துருவ் நடிக்கும் படத்தின் பெயர் "வர்மா". இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் அருஜுன் ரெட்டி என்ற பெயர் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படம் தமிழில் எடுத்துக்கொண்டு இருக்க, அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் முடிந்த ஞாயிறன்று துருவ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே முக்கிய காரணம் என்றும் கூறலாம். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் முழுக்க முழுக்க அர்ஜுன் ரெட்டியை போலவே இருக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


Advertisement