பாலா இயக்கிய வர்மா படம் ஓடிடியில் ரிலீசாகிறதா! தீயாய் பரவிய தகவல்! தயாரிப்பாளர் விளக்கம்!

Summary:

Varma director clarifies varma releasebin OTT

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. அதனை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதலில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் பாலா இப்படத்தை இயக்கினார். 

படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வர்மா படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. எனவே  தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடுவதை கைவிடுவதாக அறிவித்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா படத்தை இயக்கி வெளியிட்டனர்.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில் வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் ரடிலால் அப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக சமூக  வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் அதற்கு அவர்  இது வதந்தி என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

     


Advertisement