"CSK மேல இவ்வளவு 'லவ்' வா"... 1 மாசத்துக்கு சைவமாக மாறும் வரலக்ஷ்மி.? விநோத பிரார்த்தனை.?

"CSK மேல இவ்வளவு 'லவ்' வா"... 1 மாசத்துக்கு சைவமாக மாறும் வரலக்ஷ்மி.? விநோத பிரார்த்தனை.?



varalakshmi-sarath-kumar-prayed-for-csk-team-win

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் தீவிர  ரசிகையான இவர் இறுதிப் போட்டியை காண்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Varalakshmi Sarath Kumar

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின்னர் பிரபல  திரை விமர்சகர் ஆன ரமேஷ் பாலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் சென்னை அணிக்காக இறுதி இரண்டு பாலில் ஜெயித்தால் ஒரு மாத காலம் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பதாகவும் வேண்டும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தான் ஒரு மாத காலம் அசைவ உணவை சாப்பிட மாட்டேன் என்று தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இது மிகவும் கடினமான ஒன்றுதான் ஆனால் சிஎஸ்கே அணியின் மீது கொண்ட அன்பால் இது சாத்தியமாகிறது எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.