அம்மாவுடன் வந்து உதயநிதியை சந்தித்த வரலட்சுமி..! என்ன காரணம் தெரியுமா.? குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

அம்மாவுடன் வந்து உதயநிதியை சந்தித்த வரலட்சுமி..! என்ன காரணம் தெரியுமா.? குவிந்துவரும் பாராட்டுக்கள்.!


varalakshmi meet udhanithi satalin

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வரலட்சுமி. இவர் பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் வில்லியாகவும் அவதாரமெடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் மற்றும் சண்டைக்கோழி 2 போன்ற படங்களில் மிரட்டியிருந்தார். நடிகை வரலட்சுமி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து  நடிக்கக் கூடியவர். தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. 

சினிமாவில் பிசியாக இருக்கும் வரலட்சுமி, சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலப் பணிகளையும் செய்து வருகிறார். தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். 

இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவிஎண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார். இந்த சேவையையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.