சினிமா

வரலக்ஷ்மி காதலிப்பது இந்த நடிகரைதானா? போட்டுடைத்த ரகசியத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!

Summary:

varalakshmi loves favourite actors

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அதனை தொடர்ந்து அவர் தாரை தப்பட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது ‘மாரி 2’ படத்தை தொடர்ந்து கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு’ என பல படங்களில் நடித்து வருகிறார்.

     varalakshmi க்கான பட முடிவு

நடிகை வரலக்ஷ்மி விஷாலை காதலிப்பதாக பெரும் சர்ச்சைகள் கிளப்பியது.அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால் தான் அனிஷா என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் வரலக்ஷ்மி சமீபத்தில், டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய படம்

அந்நிகழ்ச்சியில் வரலக்ஷ்மியிடம் “நீங்க  ஐ லவ் யூ என சொல்ல வேண்டுமெனில் யாரை பார்த்து சொல்வீங்க?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வரலக்ஷ்மி “நடிகர் பிரபாஸிடம் தான் சொல்வேன்” என்று சட்டென்று பதிலளித்துள்ளார்.

 


Advertisement