பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
ஆத்தாடி.. செம தில்லுதான்! பயமே இல்லாமல் கட்டிப்பிடித்தபடி நடிகை வரலட்சுமி வெளியிட்ட புகைப்படம்! மிரண்டுபோய் பார்த்த ரசிகர்கள்!
ஆத்தாடி.. செம தில்லுதான்! பயமே இல்லாமல் கட்டிப்பிடித்தபடி நடிகை வரலட்சுமி வெளியிட்ட புகைப்படம்! மிரண்டுபோய் பார்த்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக பிரபலமானவர் நடிகை வரலட்சுமி. இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்யின் சர்க்கார் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி-2 படத்தில் கொடூர வில்லியாக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
சமீபத்தில் வரலட்சுமி நடிப்பில் உருவான டேனி திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் சேசிங், கிராக் மற்றும் விமலுடன் இணைந்து நடித்த கன்னிராசி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நடிகை வரலட்சுமி கொரோனா காலத்தில், வறுமையில் வாடியவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பெருமளவில் சிரமப்பட்ட பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.
இந்த நிலையில் கொழுகொழுவென இருந்த வரலட்சுமி தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். அவர் சமீபத்தில் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும் நாய் ஒன்றை கட்டிபிடித்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பார்ப்பதற்கு பயமா உள்ளது. உங்களுக்கு செம தில்லுதான் என கூறியுள்ளனர்.