வெற்றிநடைப் போடும் யானை! தன் அண்ணனுக்கு வனிதா கூறியதை பார்த்தீங்களா!!

வெற்றிநடைப் போடும் யானை! தன் அண்ணனுக்கு வனிதா கூறியதை பார்த்தீங்களா!!


vanitha-wish-to-arunvijay-yanai-movie

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் யானை. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக  ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், அம்மு அபிராமி, ராஜேஷ் புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இந்தப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்நிலையில் யானை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது.

இந்த நிலையில் தனது அண்ணனுக்கு நடிகை வனிதா வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் சிலர் பாராட்டினாலும், சிலர் இப்படியெல்லாம் செஞ்சாலும் உங்களை மறுபடியும் சேர்த்துக்க மாட்டாங்க என கலாய்த்து வருகின்றனர்.