சினிமா

என்னது! காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா? உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பாலை பிரிந்தது குறித்து மனம் நொறுங்கிப் போய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவி வந்தது. அதனை தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்து வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், எனது வாழ்க்கை தொடர் போராட்டமாகி விட்டது. இது எனக்குப் புதிதல்ல. காதலில் தோற்பது எனக்கு பழகிவிட்டது. நான் அதைக் கடந்து வந்திருக்கிறேன், மிகவும் தைரியமாக வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறேன். காதலில் நம்பிக்கை வைத்து அதனால் ஏமாற்றமடைவது மிக வேதனையானது. தாங்க முடியாத வலியைத் தரக்கூடியது. ஆனால் கொஞ்ச நாள் ஆக எல்லாம் மரத்துப் போய்விடும். நம் கண்முன்னே நமது வாழ்க்கையை இழப்பது மிகுந்த வலியைத் தரக்கூடியது. 

இது நடந்திருக்க வேண்டாம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். அதை நான் கற்று வருகிறேன். அதை நான் தைரியத்தோடு  எதிர்கொள்கிறேன். போலியான செய்திகளைப் படித்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவரிடம் நான் அன்பு செலுத்தினேன்.

 என் வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கனவுகளும் நம்பிக்கையும் நொறுங்கிப் போகலாம் என்ற சூழலில் நான் தற்போது இருக்கிறேன். நான் பாசிட்டிவ்வாகதான் இருக்கிறேன் ஆனாலும் பயமாக உள்ளது. இதுவும் கடந்து போகும் என நம்புகிறேன். அன்பு மட்டுமே என்னை உடைக்கக்கூடிய ஒரு விஷயம். நான் அற்புதங்களை நம்புபவள்.எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எனது குழந்தைகளை மனதில் வைத்து சரியான முடிவினை எடுப்பேன்.

நான் ஒரு அதிசயம் நடக்குமென நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன். அது நடக்கவில்லையென்றாலும் அந்தச் சூழலை எதிர்கொள்வேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Advertisement