சினிமா

ரொம்ப மிஸ் பண்றேன்.. மிகுந்த வேதனையில் வனிதா போட்ட உருக்கமான பதிவு! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Summary:

நடிகை வனிதா தனது அம்மா மஞ்சுளா விஜயகுமாரின் 8வது ஆண்டு நினைவு நாளை எண்ணி சமூகவலைதளத்தில் உ

நடிகை வனிதா தனது அம்மா மஞ்சுளா விஜயகுமாரின் 8வது ஆண்டு நினைவு நாளை எண்ணி சமூகவலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த  சந்திரலேகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல முன்னணி திரை நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள்களில் ஒருவராவார். அவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பல சர்ச்சைகளை சந்தித்து தற்போது தனது இரு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் வனிதா தனது அம்மாவும், பிரபல நடிகையுமான மஞ்சுளாவின் 8வது ஆண்டு நினைவு நாளை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில்,  நீங்கள் என்றும் எனக்கு சிறந்ததைதான் அளித்துள்ளீர்கள். மேலும் தற்போதும் அனைத்து விதத்திலும் என்னுடன் நீங்கள் உள்ளீர்கள். உங்களை நாள்தோறும் ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்கிறேன். என் வாழ்க்கையின் சிறந்த தருணங்களிளெல்லாம் நீங்கள் என்னுடன் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் நீங்கள் எப்பொழுதும் என்னுடன் இருப்பீர்கள் என எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

இதனைக்கண்ட வனிதாவின் ரசிகர்கள், பிறக்கும் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். கவலைப்படாதீர்கள், அம்மா எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் என கூறியுள்ளனர். மேலும் சிலர் அம்மா உயிரோடு இருந்தபோது அவர் வேதனைப்படும்படி நடந்து கொண்டீர்கள். இனிமேலாவது யார் மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ளாதீர்கள் என கூறியுள்ளனர்.

 


Advertisement