தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
என்னது! பீட்டர் பாலுடன் தீவிர சமாதான பேச்சுவார்த்தையா! உண்மையை போட்டுடைத்த வனிதா!
பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் வனிதா சமீபத்தில் பீட்டர்பால் பயங்கரமாக குடிப்பதாக குற்றம்சாட்டி அவரை விட்டு பிரிந்தார். இதுகுறித்து வருத்தத்துடன் வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் மீண்டும் சர்ச்சைகள் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து வனிதா, பீட்டர் பால் சந்தித்து சமாதானம் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் விரட்டி விட்டதாகவும் தகவல்கள் பரவியது.
Who rejected someone. I have tried my best to work things out in my past relationships and put up with a lot of nonsense but after an unbearable point couldn't tolerate further and had to walk out..i cant live a lie I'm not made that way..so please cut short your imagination
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 4, 2020
Love..I have come to terms with my luck in love and have decided to focus on my work and future plans. Kindly stop speculating and discussing this further..I have no legal ties or emotional ties with him..my emotions have gone numb..I am dealing with my pain my way..thanks for
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 4, 2020
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மீண்டும் பீட்டர்பாலுடன் சமாதானம் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் நிராகரித்து விட்டதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் பரவி வருகிறது. என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் நிராகரித்திருப்பேன். இதற்கு முன் எனது உறவுகளை சரிசெய்ய பல முயற்சிகளை செய்து, ஏராளமான அபத்தங்களை பொறுத்துள்ளேன்.
கடைசி வீடியோ வெளியிடப்பட்டதற்குப் பிறகு, நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முடிவை எடுத்துவிட்டார். அதை என்னால் ஏற்க முடியாது. காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன். இனி எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளேன். எனவே, இதற்கு மேல் யூகிப்பது, விவாதிப்பதை நிறுத்துங்கள். நான் இப்போது உணர்ச்சியற்று போயுள்ளேன்.என் வலியை நானே எனது வழியில் கையாள்கிறேன்.உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.