சினிமா

தெய்வமகள் சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்க வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

Summary:

vani pojan-air hostres

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ சீரியலில் நடித்த இவர் அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் ஏற்ப்பட்டது .

பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் நடுவராக இருந்தார். 

 சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு வெள்ளித்திரையிலும் வாணி போஜனுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

சினிமாவுக்கு  வருவதற்கு முன்னர் வாணி விமான நிலையத்தில் பணி பெண்ணாக வேலை பார்த்துள்ளார்.ஆனால் அவர் பார்த்துவந்த ஏர் விமான நிறுவனம் நிதி பிரச்சனை காரணமாக ஒரு சிலரை பணியிருந்து நீக்கியுள்ளது.அதில் வாணியும் ஒருவர். அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் வாணி மாடலிக் துறையில் சேர்த்துள்ளார்.

மாடலிக் துறையில் சேர்ந்ததன் மூலம் அவருக்கு முதலில் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் வெள்ளித்திரையில் களமிறங்கியதாக  வாணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கதாநாயகியாக சினிமாவில் களம் இறங்க உள்ளார் வாணி போஜன்.

 முன்னதாக நடிகை பிரியா பவானி சங்கரும் தொலைக்காட்சியில் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார்

ஜெய்யை வைத்து ‘ஜருகண்டி’ படத்தைத் தயாரித்த நடிகர் நிதின் சத்யா, தற்போது வைபவை வைத்து ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை, சார்லஸ் இயக்குகிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக பெரிய திரையில் அறிமுகம் ஆகிறார் வாணி போஜன்.


Advertisement