சினிமா

அம்மணிக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த நடிகை வாணி போஜன்..

Summary:

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தி நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடி

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தி நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை வாணி போஜன்.

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வாணிபோஜன் கடந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் ஒப்பந்தமாகிவரும் வாணிபோஜன் அடுத்ததாக சியான் 60 படத்தில் நடிக்க உள்ளார்.

விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இனைந்து நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கேங்க்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த பிரமாண்ட படத்தை விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.

சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை வாணிபோஜனும் தற்போது இந்த படத்தில் இணைத்திருப்பதாக படக்குழு அறிவித்ததை அடுத்து, அதனை உறுதி செய்துள்ளார் வாணிபோஜன்.


Advertisement