புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
யோகி பாபுவிற்கு இப்படியொரு அதிர்ஷ்டமா கதாநாயகியாகும் வாணி போஜன்..
தமிழ் திரை உலகில் பிரபலமான காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கலக்கி வருகிறார். இவரது காமெடிக்காகவே தற்போது ரசிகர் கூட்டங்கள் பெருகி வருகின்றது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'மாவீரன்' திரைப்படத்தின் காமெடியனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார். மேலும் இவர் காமெடியனாக நடித்து வெளியான பல திரைப்படங்களின் முக்கியமானது 'கோலமாவு கோகிலா'
இந்த திரைப்படத்தின் மூலமாகவே இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு தற்போது மீண்டும் வாணி போஜனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
யோகி பாபு கதாநாயகனாக நடித்த 'பொம்மை' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் தான் இப்படத்தையும் இயக்கவிருக்கிறார். இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. மேலும் இப்படத்திற்கு செல்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.